அட்லீயின் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லையா? லேட்டஸ்ட் தகவல் இதோ
நடிகர் ஷாருக் கான் அடுத்து நடிக்கும் ஜவான் படத்தினை அட்லீ இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனவும் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதனால் விஜய் சேதுபதி ஹிந்தியிலும் வில்லனாக மிரட்டப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி அந்த படத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வந்திருக்கிறது. ஜவான் படத்திற்காக அட்லீ கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதால் விஜய் சேதுபதி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
அதனால் விஜய் சேதுபதி என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அவருக்கு புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்க சான்ஸ் வந்திருக்கிறது எனவும் தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu
