இந்தியாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்து முடித்த விஜய்.. வசூலில் கிங்!
ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாதனை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகியுள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மாபெரும் வசூல் சாதனையை இந்திய சினிமாவில் படைத்துள்ளார். ஆம், ஜனநாயகனுடன் சேர்த்து விஜய் நடிப்பில் வெளிவந்த 9 திரைப்படங்கள் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன.

அதுவும் மெர்சல் திரைப்படத்தில் தொடங்கி ஜனநாயகன் வரை தொடர்ந்து 9 திரைப்படங்களும் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை இந்திய சினிமாவில் உள்ள வேறு எந்த நடிகரும் இதுவரை செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu