சிவகார்த்திகேயன் உடன் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. உண்மை இதுதான்
விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை இல்லை என தற்போது தெரிய வந்திருக்கிறது.
மாவீரன்
மண்டேலா படத்திற்காக தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் மாவீரன்.
இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறார்கள் என்றும், அவரும் ஒப்புக்கொண்டார் எனவும் நேற்று தகவல் பரவியது.
ஏற்கனவே பல மல்டி ஸ்டாரர் படங்களில் நடித்து இருக்கும் விஜய்சேதுபதி தற்போது சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர்வதாக வந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள்.

உண்மை இல்லை
இந்நிலையில் தற்போது இந்த செய்தி உண்மை இல்லை என விஜய் சேதுபதி தரப்பு தெரிவித்து இருக்கிறது.
இதன் மூலமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கமல் ! அவருக்கு பதிலாக தேர்தெடுக்கப்பட்ட நடிகர்