தாய், தந்தையை வீட்டின் வாசலிலே நிற்க வைத்தாரா விஜய் ! SAC-யின் விளக்கம்..
நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே ஆன பிரச்சனை தான் தினமும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரையும் தனது வீட்டின் வாசலில் காக்க வைத்ததாக விஜய் குறித்து வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளித்து எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் "இன்றைய வார இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது. அதில் நான் கூறியிருந்த தகவல்களை சரியாக பதிவு செய்துள்ளனர்.
ஆனால் என்னுடைய குடும்பத்தை பற்றி ஒரு தவறான, நான் சொல்லாத ஒரு விஷயத்தை அதில் பதிவு செய்துள்ளார்கள். நானும் ஷோபாவும் விஜய் வீட்டிற்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச்சொன்னதாகவும் நாங்கள் இருவருமே திரும்பி வந்து விட்டதாகவும் ஒரு தவறான செய்தியை அதில் பதிவு செய்துள்ளார்கள்.
அது உண்மை அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் அவருக்கும் அவரின் தாய் ஷோபாவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்கள் எப்போதும் போல பார்த்து கொள்கிறார்கள் பேசி கொள்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது ஷோபா அவரின் வீட்டின் வெளியே காத்திருந்ததாக ஒரு பொய்யான தகவலை பதிவு செய்ததற்கு விளக்கம் அளிக்கவே இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றேன் " என SAC தெளிவுபடுத்தியுள்ளார்.