படப்பிடிப்புக்கு நடுவில் ஷாப்பிங் சென்ற தளபதி விஜய்- வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமா நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டாலே முதலில் நியாபகம் வருவது ரஜினி அவர்கள் தான்.
அவருக்கு அடுத்து விஜய் பிரபலமாக பேசப்படுகிறார். அண்மையில் விஜய் ஓட்டு போடுவதற்கு சைக்கிளில் வந்தது மிகவும் வைரலானது.
அவர் சைக்கிளில் வந்த வீடியோவை ரசிகர்கள் பல வித்தியாசமான வீடியோக்களாக மாற்றினார்கள். அந்த வீடியோக்களும் ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டது.
ஓட்டு போட்டு முடித்த அடுத்த நாளே விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாக சென்றார். அவர் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விஜய் படப்பிடிப்பிற்கு இடையில் ஷாப்பிங் சென்றிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
இதனால் ரசிகர்கள் தளபதி 65 லுக் என கமெண்ட் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த புகைப்படம் இப்போது எடுத்தது இல்லை. அட்லீ இயக்கிய மெர்சல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்கின்றனர்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri