விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணத்தில் அஜித் என்ட்ரி, ரசிகர்கள் மாஸ்... தரமான வீடியோ இதோ
நடிகர் விஜய்
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தவர். திருவிழா இல்லை என்றாலும் இவர் பட ரிலீஸ் என்றாலே அந்த நாட்கள் திருவிழாவாக மாறிவிடும்.
நிறைய படங்கள் மூலம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை கொடுத்திருக்கிறார், ஆனால் இந்த சினிமா களத்தை விட பெரிய களம் காண இருப்பதால் ஜனநாயகன் படத்தோடு நடிப்பை விட இருக்கிறார்.
வைரல் வீடியோ
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர் இப்போது முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கிவிட்டார். சனிக்கிழமை தோறும் ஒவ்வொரு ஊருக்கு சென்று மக்களிடம் உரையாடி வருகிறார்.
இன்று நாமக்கல்லில் வைத்து தனது தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜய். அவருக்கு வழக்கம் போல் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்று வருகிறார்கள்.
அப்போது ஒருவர் ரசிகர், ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்-விஜய் இருக்கும் ஒரு போட்டோவை பிரேம் போட்டு கொடுத்துள்ளார்.
அதில் பிரியமுடன் விஜய் என்று எழுதி கையெழுத்தையும் போட்டுக்கொடுத்தார் விஜய், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Moment of the day 😍😍#உங்கவிஜய்_நா_வரேன்
— Vijay Fans Trends (@VijayFansTrends) September 27, 2025
pic.twitter.com/rZkp1VrDLX