நட்சத்திர வாரிசுகளின் கூட்டணி ! சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கவுள்ள விஜய் மகன்..
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
மேலும் இவரின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி விஜய்யின் மகன் லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.
அவரை சினிமாவிற்கு கொண்டு வர அனைவரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது, விஜய் அவரின் மகன் முடிவை அவர் பக்கமே திருப்பி விட்டாராம்.
சண்டை மற்றும் டான்ஸ் பயிற்சியை சீக்கரமே தொடங்கவுள்ள ஜேசன் சஞ்சய், தற்போது உலக சினிமா படங்களை எல்லாம் பார்த்து வருகிறாராம். 2025-ல் விஜய்யின் மகன் என்ட்ரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் விக்ரம் மகன் துருவ் மற்றும் சஞ்சய் இருவரும் அடிக்கடி சேர்ந்து காணப்படுகிறார்களாம். இவர்களின் கூட்டணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன்னும் இருப்பதாக சொல்லப்படுகிறது.