இயக்குனராக மாறிய விஜய்யின் மகன் சஞ்சய்.. வெளிவந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்
ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்பதை நாம் அறிவோம்.
இவர் கடந்த ஆண்டு சினிமா துறை சார்ந்த படைப்பை முடித்தார். விரைவில் சினிமாவில் காலடி எடுத்து வைக்க போகிறார் என்று தகவல் வெளிவந்தது.
ஏற்கனவே தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட சஞ்சய்காக கதை எழுதி படம் இயக்கவிருந்தார். ஆனால், சஞ்சய் தற்போது தனக்கு இன்டர்ஸ்ட் இல்லை என்று கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இயக்குனராக மாறிய சஞ்சய்
இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராகவே களமிறங்கியுள்ளார். ஆம், ஏற்கனவே சில குறும் படங்களை இயக்கியிருந்தார் சஞ்சய், தற்போது மீண்டும் புதிய குறும் படத்தை இயக்கி வருகிறார்.
அந்த குறும் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் ஒரு இயக்குனராக சஞ்சய் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று செய்திகள் வெளியாகிறது.
இதோ பாருங்க..
SAC - Director , #ThalapathyVijay - Actor , Now Sanjay - Director.
— Shankar (@Shankar018) January 27, 2023
Director Jason Joseph Sanjay ? pic.twitter.com/D2zqz9xkHm
பல கோடிகள் லாபத்தை அள்ளி கொடுத்த துணிவு.. செம மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்