முன்னணி இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்த விஜயின் மகன்.. காரணத்தை கூறிய தளபதி
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்காக ப்ரோமோஷன் செய்யும் விதமாக இன்று அவரது பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அதில் நெல்சன் தான் விஜய்யை கேள்வி கேட்டிருக்கிறார். உங்கள் மகன் சஞ்சய் எப்போது நடிக்க வருவார் என நெல்சன் கேட்டார்.
"அது அவனோட INTEREST. அவர் நடிக்க வேண்டும் என நினைத்தால் என்னுடைய சப்போர்ட் இருக்கும். சிலர் கதையுடன் வருவார்கள், அதை அவனிடம் சொன்னேன். என்னை 2 வருஷம் விட்டுடுங்க என அவன் சொன்னான்.
ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கதை சொல்ல வந்தார். அது எனக்கு தான் என முதலில் நினைத்தேன். ஆனால் சஞ்சய்க்கு என பின்னர் தான் கூறினார். கதை நன்றாக இருந்தது.
Boy next door ரோல். அதில் நடிக்க அவன் ஒப்புக்கொள்ளவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் சஞ்சய் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு விஜய் கூறி இருக்கிறார்.