ஹீரோவாக களமிறங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. அவருக்காக கதையை தயார் செய்துள்ள இயக்குனர்

By Kathick Feb 11, 2023 11:30 AM GMT
Report

விஜய் மகன் சஞ்சய்

விஜய்யின் மகன் சஞ்சய் சமீபத்தில் தான் சினிமா சார்ந்த படிப்பை முடித்தார். தற்போது ஒரு குறும் படத்தையும் இயக்கி வருகிறார்.

இயக்கத்தில் முழுமூச்சாக இருக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோவாக களமிறங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. அவருக்காக கதையை தயார் செய்துள்ள இயக்குனர் | Vijay Son Sanjay To Act In Popular Director Film

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய்யின் மகனை கேட்டுள்ளனர். விஜய் இந்த விஷயத்தை சஞ்சயிடம் கூறியுள்ளார்.

ஹீரோவாக அறிமுகம் 

ஆனால், சஞ்சய் தனக்கு இயக்கத்தில் மட்டுமே கவனம் உள்ளது, நடிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் சஞ்சய்யை படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறதாம்.

ஹீரோவாக களமிறங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. அவருக்காக கதையை தயார் செய்துள்ள இயக்குனர் | Vijay Son Sanjay To Act In Popular Director Film

இந்த கதையை சுதா கொங்கரா சஞ்சய்காகவே தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம். ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சஞ்சய்யை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஆனால், அப்போதும் தனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை என சஞ்சய் கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 நாள் கால்ஷீட்டுக்கு ரஜினி வாங்கும் சம்பளம்.. இத்தனை கோடியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US