விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு
சண்முக பாண்டியன்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பெற வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்தின் மறைவுக்கு பின் சண்முக பாண்டியன் திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.
அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன் என ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் கூறியிருந்தனர். அதே போல் சண்முகபாண்டியன் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
புதிய கூட்டணி
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து தான் படம் இயக்கப்போகிறாராம்.
அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். சிவகார்த்திகேயன் தனது திரைவாழ்க்கையில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிக்க உதவியாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் பொன்ராம்.
ஆனால் சீமராஜா, டிஸ்பி என அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக முன்னணி நடிகர்களுடன் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி எந்த அளவிற்கு பேசப்பட போகிறது என்று.