'நடக்கக்கூடாதது நடந்துவிட்டது'.. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசிய விஜய்..
கரூர் துயர சம்பவம்
கடந்த மாதம் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது மிகப்பெரிய அதிர்வலையை இந்திய அரசியலில் ஏற்படுத்தியது.
41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களை நேரில் சென்று விஜய் பார்க்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அனுமதி கிடைத்தபின், விரைவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விஜய் பார்க்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினரிடம் பேசிய விஜய்
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகாலில் விஜய் பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தனுஷ்குமார்.
அவருடைய குடும்பத்தினரிடம் விஜய் வீடியோகால் மூலமாக பேசியுள்ளாராம். 'நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்புதான்' என விஜய் பேசியதாக தகவல். மேலும், தனுஷ்குமாரின் தங்கையிடம் பேசும்போது, 'ஒரு அண்ணனாக உங்களுடன் இருந்து எப்போதும் ஆதரவு அளிப்பேன்' என்றும் விஜய் கூறியுள்ளாராம்.
விரைவில் அவர்களை நேரில் சந்திக்கவும் தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.