விஜய்யின் Goat படத்தின் OTT ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலைபோனதா?- தெறி மாஸ்
விஜய்யின் Goat
வெங்கட் பிரபு இயக்கததில் AGS நிறுவனம் தயாரிக்க வேகமாக தயாராகி வரும் திரைப்படம் தான் Goat. படத்தின் பெயர் The Greatest Of All Time என புதுவருட ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டது.
ஃபஸ்ட் லுக்கும் வெளியாக ரசிகர்கள் பட பெயரை டிரெண்ட் செய்து வந்தார்கள்.
இப்படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, லைலா, மோகன், பிரேம்ஜி, வைபவ், அஜ்மல், ஜெயராம், நிதி சத்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது, சென்னை, ஐதராபாத் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
OTT ரைட்ஸ்
விஜய்யின் படங்களில் வியாபாரம் எப்போதுமே ரசிகர்கள் வியக்கும் வண்ணம் இருக்கும் தற்போது கோட் படத்தின் ஓடிடி வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது பான் இந்தியா படமாக உருவாகி வருவதால் இதன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளுக்கான உரிமையை மட்டும் ரூ.125 கோடி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்,
ஹிந்தி வியாபாரத்தை தனியாக விற்கவும் படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
