பலரையும் கவர்ந்த அந்த ஒரு மாஸ்டர் வசனம்! மாஸான சாதனை! செம ரீச் - தளபதி சொன்ன காரணம்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் விருந்தாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யின் நடனம் மிகவும் ஈர்த்தது. இது குறித்து ரசிகர்கள் #1MLikesForVaathiComing என டேக் இட்டு கொண்டாடி வருகின்றனர்.
50 சதவீத தியேட்டர் இருக்கைகள் என்ற சூழ்நிலைக்கு நடுவிலும் படம் நல்ல வசூல் செய்தது. ஓடிடி தளத்திலும் படம் வெளியானது. மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட 5 நிமிட காட்சியும் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதில் மாணவர்களிடம் தோனி பற்றி விஜய் பேசியிருப்பார். இவ்வசனம் இணையதளத்தில் வைரலாக பரவியது. அதாவது “ தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம் என அவர் கூறியுள்ளார்.
இவ்வசனம் நேற்று முதல் தொடர்ந்து யுடுயூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.