வில்லனாக விஜய், ஹீரோவாக சூர்யா ! 100 நாட்கள் ஒடிய திரைப்படத்தில் அமையவிருந்த மாஸ் கூட்டணி..
விஜய் - சூர்யா
விஜய் மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமா டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தின் முலம் தான் நடிகர் சூர்யா திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். ஆனால் அதன்பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அதிகமாக வரவில்லை.
இதற்கிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரியமுடன் முதல்முறையாக விஜய் இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படமும் பெரிய வரவேற்பை பெற்று நூறு நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஒடியது.
அப்படியான இப்படத்தில் விஜய்க்கு நிகராக அவரின் நண்பர் கதாபாத்திரமும் அமைந்திருக்கும், வசந்த குமார் என்ற கதாபாத்திரம் Sujith Sagar என்பவர் நடித்திருப்பார்.
ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க தான் நினைத்தாராம் இயக்குநர் வின்சென்ட் செல்வா. அந்த கதாபாத்திரம் விஜய்யின் கதாபாத்திரத்தை விட பலமாக தெரிய அதிக வாய்ப்பு உள்ளதால் நடிகர் சூர்யா வேண்டாம் என முடிவேடுத்து விட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.
டிஆர்பி-யில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்! சன் டிவிக்கு ஈடு கொடுக்கும் ஒரே விஜய் டிவி சீரியல்