சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான ராஜு மோகனுக்கு வந்த சர்ப்ரைஸ் Call... விஜய் கூறிய விஷயம்
ராஜு ஜெயமோகன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் ராஜு ஜெயமோகன்.
அந்த தொடரில் காமெடியனாக நடித்து அசத்தியிருப்பார். கனா காணும் காலங்கள் சீசன் 2, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா என சீரியல்களில் நடித்து வந்தவர் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு வெற்றியாளரானார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார்.

சர்ப்ரைஸ்
சீரியல்களை தாண்டி மனிதன், நட்புனா என்னனு தெரியுமா, முங்கைக்காய் சிப்ஸ், டான் என நடித்து வந்தவர் பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் முன்னணி நாயகனாக நடித்துள்ளார்.
படம் வரும் ஜுலை 18ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நடிகர் விஜய்யை படத்தை பார்த்துள்ளாராம். ராஜு ஜெயமோகனிற்கு போன் செய்த விஜய் படம் சூப்பராக இருப்பதாக வாழ்த்தியுள்ளார்.
இதோ ராஜு ஜெயமோகன் போட்ட பதிவு,

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri