'C. ஜோசப் விஜய் என்னும் நான்'.. தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி விஜய் அவர்கள் பதவியேற்றார்
C.ஜோசப் விஜய் என்னும் நான்
சினிமாவிலிருந்து விலகி கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்துள்ளார் தளபதி விஜய்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ், விசிக, IUML, CPI மற்றும் CPI(M) ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம் 120 இடங்கள் கிடைத்த நிலையில், ஆளுநரை சந்தித்து தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை விஜய் நிரூபித்தார்.

மாண்புமிகு முதல்வர்
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 'C. ஜோசப் விஜய் என்னும் நான்' என கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தளபதி விஜய் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார்.

அவரோடு செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, அருண்ராஜ், வெங்கட் ராமன், கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.