ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து பேசிய தளபதி விஜய்.. அப்போ லியோ LCU தான் போல
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதுக்கு முக்கியமான காரணமா இருந்ததே அந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் தான்.
படத்தில் 10 நிமிடம் வந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து பேவரைட் வில்லனாக மாறினார்.
தற்போது விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக சில நாட்களே இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ரோலக்ஸ்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் இடம், விக்ரம் படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்? ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து எதுவும் பேசினாரா? என்று தொகுப்பாளர் கேட்டார்.
பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், சூப்பர் ரா இருந்தது என்று சொன்னார். சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விதம் அருமையாக இருந்தது என விஜய் சொன்னதாக கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள், அப்போ லியோ LCU தான் இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
