மகாநதி, அய்யனார் துணை சீரியல் நடிகர்களுக்கு விஜய் டெலிவிஷன் அவார்டில் கிடைத்த விருது... குஷியில் ரசிகர்கள்
விஜய் டெலிவிஷன்
விஜய் தொலைக்காட்சி, இளைஞர்கள் அதிகம் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியாக உள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் முதலில் ரசிகர்களை பிடித்த இவர்கள் அடுத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர்கள்.
இப்போது இதில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள் போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் வரும் சீரியல்களாக உள்ளது.
அவார்ட்ஸ்
தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த விஜய் டெலிவிஷன் விருதுகள் வந்துவிட்டது. சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதின் Prelude நிகழ்ச்சி சூப்பரான நடந்தது.
அந்த நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 31 மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிலையில் பிரம்மாண்டமாக நடந்த விஜய் டெலிவிஷன் விருதில் மகாநதி மற்றும் அய்யனார் துணை சீரியலுக்கு கிடைத்த விருது விவரம் வெளியாகியுள்ளது.
Find Of The Year விருது அய்யனார் துணை சோழனுக்கு கிடைத்துள்ளதாம், சிறந்த ஜோடியாக மகாநதி சீரியல் காவேரி-விஜய் ஜோடிக்கு கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
