தளபதி 66 திரைப்படம் பூஜையுடன் எப்போது தொடங்குகிறது தெரியுமா, வெளியான புதிய அப்டேட்...
தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி சென்றுள்ளனர்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியவுள்ள நிலையில், பீஸ்ட் அடுத்த வருடம் சம்மருக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் PAN Indian திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படம் குறித்த எந்தஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே தற்போது தளபதி 66 படத்தின் பூஜை அக்டோபர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் தான் தற்போது நடித்து வரும் படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார்.
அதன்படி பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடியவுள்ள நிலையில், தளபதி 66 படத்தின் அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.