தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது தெரியுமா? வெளியான புதிய அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த ஷாப்பிங் மால் செட்டை அயல்நாட்டு ஷாப்பிங் மால்களுக்கு இணையாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
