பேஸ்புக்-ல் எந்த நடிகரின் திரைப்படமும் படைத்திராத சாதனை, நிகழ்த்தி காட்டிய விஜய் படத்தின் காட்சி
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளுடன் வெளியாகியும் கூட பெரியளவில் வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்-ல் தளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் காட்சி மிக பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஆம், அப்படத்தின் காட்சியை இதுவரை 10 மில்லியன் நபர்கள் லைக் செய்துள்ளனர், இது வேறு எந்த ஒரு தமிழ் திரைப்பட காட்சியும் படைத்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
