துப்பாக்கி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ.. இதுவரை பலரும் பார்த்திராதது
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவானது.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விஜய்யின் திரை வாழ்க்கையில் முதன் முதலில் ரூ. 100 கோடி வரை செய்த திரைப்படமாக துப்பாக்கி மாறியது.
இப்படத்திற்கு பின் தான் விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் ஓப்பன் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் இருவரும் கத்தி, சர்க்கார் என தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர்.
மேக்கிங் வீடியோ
இந்த நிலையில், துப்பாக்கி திரைப்படத்தில் இருந்து இதுவரை பலரும் பார்த்திராத மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது தங்கையை தேடி அலையும் காட்சிகளின் மேக்கிங் வீடியோ தான் இது.
இதோ அந்த வீடியோ பாருங்க..
Unseen:- Thuppakki Making Clip Just See How He pay Attention To The Creator And Explore The Scene Blast ?❤️? @actorvijay
— TD....❥ (@MiniiGirl__) June 6, 2024
pic.twitter.com/8XFSoTtTit