மேடையில் சோர்ந்து டேபிள் மீது சாய்ந்த விஜய்.. தொடர்ந்து இத்தனை மணி நேரம் நின்றாரா?
விஜய்
நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதியிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் எடுத்த மாணவர்களை வர வைத்து மேடையில் கௌரவப்படுத்தி பரிசு வழங்கும் விழா இன்று நடந்தது.
சென்னையில் நடந்த இந்த விழாவில் ஒவ்வொரு மாணவராக மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி பரிசு கொடுத்தார் விஜய்.
டேபிள் மீது சாய்ந்த விஜய்..
விஜய் தொடர்ந்து 13 மணி நேரத்திற்கும் மேலாக மேடையில் நின்று ஒவ்வொரு மாணவராக கௌரவப்படுத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அதிகம் சோர்வாகி இருக்கிறார்.
அவர் மேடையில் இருக்கும் டேபிள் மீது சாய்ந்து நிற்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. மாணவர்களுக்காக இடைவெளி இல்லாமல் மேடையில் நின்று விஜய் இப்படி செய்திருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
