பாலகிருஷ்ணா பட இயக்குனருடன் இணையும் தளபதி விஜய்.. செம மாஸ் கூட்டணி
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். இவர் நடிப்பில் அடுத்ததாக லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
லியோ படத்திற்கு பின் விஜய் அட்லீ அல்லது ஹெச். வினோத் இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்பது போல் தகவல் கூறப்படுகிறது.
செம மாஸ் கூட்டணி
ஆனால், தற்போது புதிதாக வேறொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், கோபிசந்த் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தை ஆர். பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது திரைப்படமாக அமையும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இயக்குனர் கோபிசந்த் கடைசியாக பாலகிருஷ்ணாவை வைத்து வீரசிம்மா ரெட்டி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் பட புகழ் நடிகை கார்த்திகாவா இது?- மகன், பேரன் என அவர் எடுத்த புகைப்படங்கள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
