முக்கிய முடிவெடுத்த விஜய்.. ஒரு மாதத்தில் வருகிறது அறிவிப்பு
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவர் அரசியலில் நுழைய திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது ரசிகர் மன்றத்தை பல்வேறு மாற்றங்கள் செய்து வலிமையாக மாற்றி வருகிறார்.
அடிக்கடி விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகள் உடன் விஜய் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். சுமார் 200 நிர்வாகிகள் உடன் இன்று காலை விஜய் சந்திப்பு மேற்கொண்டார்.
ஒரு மாதத்தில் கட்சி பற்றிய அறிவிப்பு
2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் விஜய் GOAT படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.
அதன் பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த சில நிர்வாகிகள் "விஜய் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஆக்ரோஷம் காட்டினார். இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை விஜய் வெளியிடுவார்" என தெரிவித்து இருக்கின்றனர்.