நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
லியோ படத்திற்கு பின் விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என தெரியவில்லை. தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.

ஆனால், மறுபக்கம் அட்லீ, ஹெச். வினோத் போன்ற இயக்குனர்களின் பெயரும் அடிபடுகிறது. விரைவில் இதற்கான முடிவு தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருகிறார்கள்.
இயக்குனர் விஜய்
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் தன்னுடைய கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் ஒரு படம் உருவாகும். ஆனால், அது எப்போது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டியின் வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ..
When is this @actorvijay na?? ? pic.twitter.com/NNwHAvUMGE
— ????? ???ˢᵃᶜʰᵉⁱⁿ♡ˢʰᵃˡⁱⁿⁱ (@Ram_Ro92) April 26, 2023
இயக்குனர் ஹரிக்கு இத்தனை கோடி தான் சம்பளமா? இதோ முழு விவரம்