அரசியலுக்காக அந்த இயக்குனருடன் இணையும் விஜய்.. இரண்டாவது முறை கூட்டணி
விஜய் - அரசியல்
தளபதி விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அவருடைய செயல்கள் மூலம் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் அரசியலில் என்ட்ரி கொடுக்க போகிறேன் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நேற்று கூட 234 தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்க பொருளாளர்களை அழைத்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அரசியலில் இறங்கிய பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியதாக தகவல் வெளிவந்தது.
விஜய் அடுத்தடுத்த படங்கள்
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இதன்பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இதற்கு அடுத்து யாருடைய இயக்க விஜய் நடிக்க போகிறார் என இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.
சில இயக்குனர்களின் பெயர் அடிபட்டலும், அவை யாவும் வெறும் அனுமானமாகவே இருந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல் அனைவரும் செம சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
விஜய் - ஷங்கர்
நடிகர் விஜய் மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகுகிறதாம். இப்படத்தின் கதையை சமீபத்தில் விஜய்யிடம் கூறி ஓகே செய்துவிட்டாராம் இயக்குனர் ஷங்கர். கண்டிப்பாக தளபதி 70 விஜய் - ஷங்கர் கூட்டணியாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தெரியவில்லை. விஜய் - ஷங்கர் இருவரும் நண்பன் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக இணையும் கூட்டணி இது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவீரன் படத்தில் நடிக்க ஷங்கர் மகள் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா