விஜய் பாட போகிறாரா.. உண்மை இதுதான்! அந்தகன் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரஷாந்த்
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அந்தாதுன் படத்தை தமிழில் பிரஷாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் ரிமேக் செய்து இருக்கின்றனர்.
இந்த படம் தொடர்ந்து தாமதம் ஆகி வந்த நிலையில் தற்போது ரிலீஸ் செய்ய ஏற்பாடுகளை பிரஷாந்த் செய்து வருகிறார்.
விஜய் வெளியிடும் பாடல்
ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பிரஷாந்த் விஜய் மற்றும் பிரபுதேவா உடன் இருக்கும் போட்டோவுடன் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் விஜய் அந்தகன் படத்தில் பாடி இருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ஆனால் உண்மையில் அந்தகன் படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிட மட்டும் போகிறாராம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் தான் இந்த பாடலை பாடி இருகிறார். நாளை இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வர இருக்கிறது.