நடிப்பதை நிறுத்தப்போவதாக சொன்ன நடிகர் விஜய் ! அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறிய இயக்குனர்..
சொதப்பிய பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே அதிகமாகி பெற்றது.
இதனால் இப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை படைக்கவில்லை, மேலும் பீஸ்ட் படத்தின் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன.
இப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது, அவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
நடிப்பதை நிறுத்த போவதாக சொன்ன விஜய்
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான விஜய் மில்டன் நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான விஷயத்தை பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய்யின் ஆரம்பகால படங்களில் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார், அப்போது விஜய்யுடன் நெருங்கிய நண்பராக இருந்த விஜய் மில்டன். தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை, 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு இயக்குனராக போகிறேன் என விஜய் சொன்னார்.
ஆனால் தற்போது விஜய் அதை பற்றி யோசித்து கூட பார்க்க முடியாத அளவு பெரிய நடிகராகிவிட்டார் என விஜய் மில்டன் கூறியுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணதிற்கு முன்பே எடுத்திருக்கும் முக்கிய முடிவு!