தேவர் குருபூஜைக்கு நடிகர் விஜய் செய்த விஷயம்.. வைரல் வீடியோ
நடிகர் விஜய் அரசியலில் குதித்த பிறகு தீவிரமாக பல விஷயங்களை செய்து வருகிறார். முக்கிய தலைவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு விஜய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என குறிப்பிட்டு அவரை பற்றி சில வரிகள் கூறி இருந்தார்.
போட்டோவுக்கு அஞ்சலி
இந்நிலையில் விஜய் அவரது அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் போட்டோவுக்கு அஞ்சலி செலுத்தி அதன் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
"இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என குறிப்பிட்டு இருக்கிறார் விஜய்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/pLo9FFF4S4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024