சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரை பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகிறது.
அதை விஜய் மற்றும் த்ரிஷா என இருவருமே மறுக்கவும் இல்லை, வெளிப்படையாக உறுதி செய்யவும் இல்லை. இருப்பினும் அவர்கள் ஜோடியாக ஒரு திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில் அவர்கள் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
சங்கீதாவை வெறுப்பேற்ற விஜய் இப்படி எல்லாம் செய்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

விக்ரம் பட்
இந்நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் விக்ரம் பட் போட்டிருக்கும் பதிவில் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு வாழவும் காதலிக்கவும் உரிமை இருக்கிறது என கூறி இருக்கிறார்.
"விஜய் மற்றும் த்ரிஷாவின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆன்லைனில் வரும் வதந்திகள் உண்மையா இல்லையா என எனக்கு தெரியவில்லை. அது உண்மை என்றால் நான் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்."

"விஜய் மற்றும் த்ரிஷாவிடம் ஒரு நல்ல விஷயத்தை பார்க்கிறேன். ஒரு விஷயம் இல்லை என அவர்கள் மறைக்கவே இல்லை என்பது கண்ணியமான விஷயம். காதலை மறைக்காமல் இருப்பதும் கண்ணியமான விஷயம் தான். காதலிப்பது என்ன அவ்ளோ பெரிய பாவமா".
"அவர்களுக்கு வாழவும், காதலிக்கவும் உரிமை இருக்கிறது" என விக்ரம் பட் கூறி இருக்கிறார்.

பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri