புது வசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா?
புது வசந்தம்
சன் டிவி எதற்கு பெயர் போன தொலைக்காட்சி என்று இப்போது உள்ள சிறுவர்களை கேட்டால் கூட கூறிவிடுவார்கள்.
அந்த அளவிற்கு காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பி மக்களின் கவனத்திலேயே இருப்பவர்கள்.
ஒரே மாதிரி கதையாக இருக்காது, மதியம், இரவு என எந்த மாதிரி கதை ஒளிபரப்ப வேண்டும் என தெளிவான பிளானோடு ஒளிபரப்புவார்கள்.
சமீபத்தில் செல்லமே செல்லம், இரு மலர்கள் போன்ற புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.

ஸ்பெஷல்
இந்த நிலையில் சன் டிவியின் ஒரு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் கடந்த வருடம் முடிந்த ஆஹா கல்யாணம் சீரியல் புகழ் அக்ஷயா ஸ்பெஷல் ரோலில் புது வசந்தம் தொடரில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் எப்போது எபிசோட் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.