சன் டிவியின் புதுவசந்தம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லி... போட்டோ இதோ
புதுவசந்தம்
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் புது வசந்தம்.
இந்த தொடரில் சோனியா சுரேஷ் நாயகியாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடித்து வருகிறார். இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் என்றால் பகல் நேரத்திற்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.
அதிலும் புதுவசந்தம் சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்றே கூறலாம். குடும்பங்கள் கொண்டாடும் தொடராக புதுவசந்தம் உள்ள நிலையில் இதில் ஒரு புதிய நடிகை என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

யார் அவர்
தொடரின் கதையில் இப்போது தெய்வீக காட்சிகள் வர இருப்பது தெரிகிறது.
அதாவது புது வசந்தம் சீரியலில் அம்மன் வேடத்தில் விஜய் டிவி சீரியல் நடிகை நடிக்க களமிறங்கியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை கண்மணி அன்புடன் சீரியல் புகழ் கிரேஸி தங்கவேல் தான் புதுவசந்தம் சீரியலில் அம்மன் வேடத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் News Lankasri
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri