விஜய் டிவி ரக்ஷன் டிவிக்கு வரும் முன் இந்த வேலை தான் செய்தாரா? இவ்வளவு கஷ்டமா
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன். தொடர்ந்து மூன்று வருடங்களாக அந்த ஷோவில் தொகுப்பாளராக இருக்கிறார்.
ரக்ஷன்
ரக்ஷன் விஜய் டிவி மூலமாக புகழ்பெற்று அதன் பிறகு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவர் துல்கர் சல்மான் நண்பராக நடித்து இருப்பார். அந்த படம் ஹிட் ஆகி நல்ல வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

டிவிக்கு வரும் முன்..
ரக்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கும் முன்பு முதலில் ஒரு கால் சென்டரில் வேலை செய்து இருக்கிறார். அதன் பின் அவரது அம்மா நடத்தி வந்த மெஸ்ஸில் பணியாற்றி இருக்கிறார்.
பல வருட போராட்டத்திற்கு பிறகு தான் ரக்ஷனுக்கு கலைஞர் டிவியில் தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து தற்போது விஜய் டிவியின் முக்கிய ஆங்கராக இருந்து வருகிறார்.

பல் மருத்துவராக மாறிய சூப்பர் சிங்கர் பிரியங்கா! சிகிச்சை செய்யும் போட்டோவை பாருங்க