விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் முதன் முதலில் பெண் வேடமிட்டு நடித்த நிகழ்ச்சி இதுதான் - அதுவும் யாருடன் நடித்துள்ளார் தெரியுமா
தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை முன் நின்று தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒருவர் ரக்ஷன்.
இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 5ல் தான் தொகுப்பாளரா பணிபுரிந்து துவங்கினார்.
இதன்பின் தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த ரக்ஷன், துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் காணும் கொள்ளையடித்தால் எனும் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
சமீபத்தில் தான் தனக்கு திருமணம் முடிந்தது என்றும் தனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றும் ரக்ஷன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்திருந்தார்.
ரக்ஷன் முதன் முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி KPY என்று அனைவரும் தெரியும். ஆனால் விஜய் டிவியின் ரக்ஷன் நடித்த முதல் நிகழ்ச்சி எதுவென்று தெரியுமா.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது' நிகழ்ச்சியில் இடம்பெறும் சிரிச்ச போச்சு-ல், வடிவேல் பாலாஜி உள்ளிட்டோருடன் இணைந்து பெண் வேடமிட்டு நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ..