நிலாவுக்காக வீட்டை அடமானம் வைக்கும் அய்யனார் துணை குடும்பம்.. கடும் கோபத்தில் வானதி
அய்யனார் துணை
ராகவ் கம்பெனியில் இருந்து வேலையை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்த நிலாவுக்கு, வேறு எங்குமே வேலை கிடைக்கவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த நிலா, தனது தோழி சொந்தமாக கம்பெனி தொடங்கப்போகிறார் என்றும், அதில் தன்னையும் பார்ட்னர் ஆக சேர்த்துக்கொள்ள ரூ. 5 லட்சம் முதலீடு வேண்டும் என கேட்கிறார் என்றும் சோழனிடம் நிலா கூறினார்.
வீடு
அதனை எப்படியாவது நாம் ரெடி பண்ணுவோம் என சோழன் கூற, தற்போது பாண்டியன் அதற்கான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, நம் வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை ரெடி செய்துவிடலாம் என பாண்டி கூறுகிறார்.

இந்த யோசனை சோழனுக்கும், சேரனுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இதன்பின், வீட்டை அடமானம் வைக்க உங்களுக்கு சம்மதமா என நடேசனிடம் சேரன் கேட்க, நிலா வந்த பிறகுதான் இந்த வீடு வீடாகவே இருக்கிறது, நிலாவுக்காக இந்த வீட்டை அடமானம் வைக்கலாம் என கூறுகிறார்.
இந்த சமயத்தில் அங்கு வரும் வானதி, இந்த வீட்டை என்ன பண்ணப் போகிறீங்க என கோபத்துடன் கேட்கிறார். இனி என்ன நடக்கப்போகிறதோ!
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri