பாண்டி பிடிவாதத்தால் சேரன் எடுத்த அதிரடி முடிவு, என்ன இப்படி யோசிட்டாரு... அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல்.
பாசக்கார அண்ணன்-தம்பிகளை சுற்றிய ஒரு கதை, இவர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் திருமணம் செய்து வர அவர்களின் வாழ்க்கையே அப்படியே மாறிவிடுகிறது. இருளில் இருந்துவந்த அவர்களின் வாழ்க்கை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
இதுநாள் வரை குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருந்த சேரன் மற்றும் தம்பிகள் இப்போது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று பரிகாரமும் செய்துவிட்டனர்.

புரொமோ
தமிழில் வெற்றிகரமாக ஓடும் இந்த சீரியல் தெலுங்கிலும் விரைவில் ரீமேக் ஆக உள்ளது.
இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலின் இந்த வார புரொமோ வெளியாகியுள்ளது. அதில் வானதி-பாண்டியிடம் தன்னை திருமணம் செய்து அழைத்துச் செல் என்கிறார், அவரோ அண்ணனுக்கு ஆகாமல் திருமணம் கிடையாது என கூறுகிறார்.

வானதி ரோட்டில் சேரனை பார்த்து நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்யுங்கள் என கெஞ்சுகிறார். இதனால் வருத்தத்தில் சேரன், உடனே ஏதாவது பெண் பாருங்கள், எப்படி இருந்தாலும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்.