பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பம் எப்போது, கலக்கல் புரொமோவுடன் வந்த அறிவிப்பு... வீடியோ இதோ
பிக்பாஸ் 8
பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று.
ஹாலிவுட் பக்கம் படு ஹிட்டடித்த இந்த ஷோவின் தாக்கம் அப்படியே பாலிவுட் பக்கம் வந்து வெற்றிகரமாக பல எபிசோடுகள் ஒளிபரப்பாக தென்னிந்திய பக்கம் வந்தது.
முதல் சீசன் தமிழில் கொஞ்சம் பிரச்சனை, சர்ச்சைகளுடன் தான் ஒளிபரப்பானது, ஆனால் அதற்கு அடுத்தடுத்த சீசன்கள் நல்ல வெற்றியை கண்டது.
தெலுங்கில் கூட பிக்பாஸ் சீசன் அடுத்தடுத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, நிகழ்ச்சியை நாகர்ஜுனா தற்போது சூப்பராக நடத்தி வருகிறார்.
ஆரம்பம்
இந்த நிலையில் தமிழில் ஒளிபரப்பாக போகும் பிக்பாஸ் 8வது சீசன் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள நிலையில் சூப்பரான புரொமோவுடன் நிகழ்ச்சி ஆரம்பநாள் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது பிக்பாஸ் 8வது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது.