விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலின் நேரம் மாற்றம்... விவரம் இதோ
விஜய் டிவி
விஜய் டிவி என்றதுமே முதலில் நியாபகம் வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான்.
சூப்பர் சிங்கர், நடன நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி, புத்தம் புதிய கேம் ஷோக்கள் என நிறைய ஒளிபரப்பி மக்களை பிடித்துவிட்டார்கள்.
ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமில்லாமல் நாங்கள் சீரியல்கள் மூலமாகவும் கெத்து காட்டுவோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடர்களை ஒளிபரப்பி மக்களை ரசிக்க வைத்து வருகிறார்கள்.
நேரம் மாற்றம்
வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் 9வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது, எனவே சீரியல்களின் நேரம் மாற்றம் ஏற்படும் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவல் என்னவென்றால் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியல் இனி திங்கள் முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.