விஜய் டிவி ராமர் அரசு அதிகாரியா.. பலருக்கும் தெரியாத தகவல்
விஜய் டிவியில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் ராமர். அவரை 'என்னம்மா' ராமர் என சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
அவர் பெண் வேஷத்தில் 'என்னமா இப்படி பண்றீங்களேமா' என செய்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஸ்பூப் மிகப்பெரிய அளவில் ஹிட். தற்போது டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களிலும் தோன்றி வருகிறார் ராமர்.
ராமர் மதுரை அருகில் மேலூர் பகுதியை சேர்ந்தவர். அவரை காமெடியனாக மட்டுமே நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு அரசு அதிகாரி என்கிற தகவல் ரசிகர்கள் பலருக்கும் தெரியாதது. அவர் VAO வாக பணியாற்றி வருகிறாராம்.
எம்பி சு.வெங்கடேசன் என்பவர் ட்விட்டரில் ராமர் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்" என கூறி இருக்கிறார் .
அந்த பதிவு இதோ
இன்று கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 30, 2022
மகிழ்ச்சி .@vijaytelevision
#VijayTv #Ramar #madurai #KPY pic.twitter.com/cFmA461Ds7