புதிய BMW கார் வாங்கியதும் யாரும் செய்யாத விஷயத்தை செய்த தங்கதுரை... பாராட்டும் ரசிகர்கள்
தங்கதுரை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல கலைஞர்கள் பிரபலம் ஆனார்கள்.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன தங்கதுரை அதிகம் பேமஸ் ஆனது அவரின் பழைய ஜோக்குகள் மூலம் தான். தன்னுடைய பழைய ஜோக்குகளை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார், அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
தங்கமான தங்கதுரை
எல்லோருக்கும் இருக்கும் ஆசை போல தங்கதுரைக்கும் ஒரு நீண்டநாள் கனவு உள்ளது.
அதாவது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்பது தானாம். அந்த ஆசையும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார் தங்கதுரை.
புதிய கார் வாங்கியதும் குடும்பத்தினருடன் வெளியே செல்ல அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் தங்கதுரை அவ்வாறு செய்யாமல் தன்னுடைய புதிய காரில் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்களுடன் சென்னையை ஒரு ரவுண்டு அடித்துள்ளார்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை தங்கதுரையின் இந்த செயல் வெளிப்படுத்தி உள்ளது. தங்கதுரையில் இந்த தங்கமான செயலையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.