குக் வித் கோமாளி ஷோ இயக்குனர் இவர்தான்! வெளியான போட்டோ இதோ
விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற ஷோக்களுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி
தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்கள் தற்போது சினிமாவில் களமிறங்கிவிட்டனர். புகழ், ஷிவாங்கி, அஸ்வின் என பலரும் CWC மூலமாக தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.
புகழ் படங்களில் நடித்து வந்தாலும் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் அவ்வப்போது வந்து செல்கிறார்.
இயக்குனர் இவர்தான்
குக் வித் கோமாளி ஷோ பெரிய வெற்றி அடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவின் இயக்குனர் யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. பார்த்திவ் மணி என்பவர் தான் ஷோவை இயக்கி வருகிறாராம்.
அவரது புகைப்படங்கள் இதோ..