விஜய் டிவியில் வரும் புது சீரியல் 'தனம்'! இப்படி ஒரு கதையா.. வெளியான ப்ரோமோ
விஜய் டிவியில் விரைவில் தனம் என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது. அதில் ஹீரோயினாக சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் புகழ் சத்யா தேவராஜன் தான் நடிக்கிறார்.
மேலும் சன் டிவி வானத்தைப்போல தொடரில் சின்ராசுவாக நடித்த ஸ்ரீகுமார் தான் 'தனம்' சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இருப்பினும் அவர் ஆரம்பத்திலேயே இறந்துவிடுவது போல தான் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
ப்ரோமோ
தனம் சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ரீகுமார் மற்றும் சத்யா இருவரும் திருமணமாகி முதல் நாளே தங்கள் குடும்பத்தினருக்காக ஒரு முடிவை எடுக்கின்றனர்.
ஆனால் அடுத்த நொடியே எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஸ்ரீகுமார் இறந்துவிட்டதால் மொத்த குடும்பமும் பணத்திற்காக கஷ்டப்படுவது போலவும் காட்டப்பட்டு இருக்கிறது.
கணவர் இறந்த பிறகும் அந்த குடும்பத்தை ஹீரோயின் தான் ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறார். ப்ரோமோவை நீங்களே பாருங்க.

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu
