விஜய் டிவியின் தனம் சீரியல் நடிகர் க்ரிஷிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... அழகிய ஜோடியின் வீடியோ
தனம் சீரியல்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது சீரியல்களிலும் கெத்து காட்டி வருகிறது. இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து நிறைய புத்தம் புது சீரியல்கள் களமிறங்கிய வண்ணம் உள்ளது.
சுட்டும் விழ சுடரே, அழகே அழகு, கனா கண்டேனடி என தொடர்ந்து 3 புதிய சீரியல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போகப் போக எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம் ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரின் நாயகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வீடியோ
அவர் வேறுயாரும் இல்லை தனம் சீரியலில் நாயகனாக நடிக்கும் க்ரிஷிற்கு தான் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் முதலில் சத்யா நடித்து வந்தார், அவர் திடீரென பாதியிலேயே வெளியேற அவருக்கு பதில் க்ரிஷ், கதிராக கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவருக்கு சஜிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அந்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இதோ,