புதிய சீரியல் என்ட்ரி, சமீபத்தில் தொடங்கிய சீரியலை முடிக்கும் விஜய் டிவி... ரசிகர்கள் ஷாக்
விஜய் டிவி
கடந்த அக்டோபர் 5ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் 9வது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் சண்டை, அழுகை, கூச்சல் போன்ற விஷயங்களே மிகவும் அதிகமாக இருக்கிறது.
விளையாட்டை சிறந்த முறையில் யாரும் விளையாடியது போல் தெரியவில்லை. நிகழ்ச்சியே முடியப்போகிறது ஆனால் மக்களால் யார் வெற்றியாளர் என கணிக்கவே முடியவில்லை.

புதிய தொடர்
1 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 9 முடிவுக்கு வரப்போகும் நிலையில் அந்த நேரத்தில் சீரியல்கள் ஒளிபரப்ப விஜய் டிவி பிளான் செய்துவிட்டனர். இதுவரை சுட்டும் விழ சுடரே மற்றும் அழகே அழகு என இரண்டு புதிய சீரியல்களின் புரொமோக்களை களமிறக்கியுள்ளனர்.

இந்த 2 சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் பழைய சீரியல் ஒன்றை விஜய் டிவி முடிக்கிறார்கள். அது என்ன தொடர் என்றால் அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட பூங்காற்று திரும்புமா சீரியல் தான்.
இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் சீரியலை இப்போது தானே தொடங்கினார்கள் அதற்குள் முடிக்கிறார்களா என ஷாக் ஆகியுள்ளனர்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu