புதிய கார் வாங்கியுள்ள விஜய் டிவி பிரபலம் அமுதவாணன்.. வாழ்த்தும் ரசிகர்கள், என்ன கார் பாருங்க
அமுதவாணன்
நகைச்சுவை திறமையை கொண்டு விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்று பிரபலம் ஆனவர் அமுதவாணன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்ட அமுதவாணன் தனக்கென ஒரு தனி பெயரை பெற்றார்.
பிக்பாஸ் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்த்தால், அமுதவாணன் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது, ஆனால் அந்த நேரத்தில் வேறொரு நிகழ்ச்சிகளில் மாட்டிக் கொள்வதால் நிறைய பட வாய்ப்புகளை மிஸ் செய்தேன் என பேசியிருந்தார்.
புதிய கார்
இந்த நிலையில் நடிகர் அமுதவாணன் தனது இன்ஸ்டாவில் புதிய கார் வாங்கியிருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்.
தனது குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கியிருக்கிறார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அமுதவாணனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.