திருமணம் முடிந்தபின் விஜய் டிவி புகழ் வெளியிட்ட முதல் பதிவு ! என்ன தெரிவித்துள்ளார் பாருங்க
விஜய் டிவி புகழ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரபானா முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி. மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரியளவில் பிரபலமானவர் புகழ்.
அதனையடுத்து விஜய் டிவி-ன் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் புகழ் அவரின் நீண்ட நாள் காதலியான பென்ஸ் ரியாவை நேற்று திருமணம் செய்துகொண்டார். இதனால் புதுமண தம்பதிகளான அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.
மேலும் தற்போது புகழ் அவரின் சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் திருமணம் குறித்து முதல்முறையாக பதிவிட்டு இருக்கிறார். அதில் “திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!” என பதிவிட்டு இருக்கிறார்.
எங்கள் திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து திரையுலக/தொலைக்காட்சி நண்பர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து உதவும் என் உயிர் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்??நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்!❤️ pic.twitter.com/qodfJHIbEl
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 2, 2022
சென்னையை தொடர்ந்து வெளிநாட்டில் கோடிக்கணக்கில் வீடு வாங்கியுள்ள விஜய்