பழைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பப்போகும் விஜய் டிவி... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
டிவி
தமிழில் மூன்றே மூன்று டாப் தொலைக்காட்சி ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்று வருகிறது.
சன், விஜய், ஜீ தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகளின் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
சன் டிவி சீரியல்களில் டாப் என்பதால் சீரியல்களிலேயே என்னென்ன வித்தியாசம் காட்டலாம், எப்படி மக்களை அதிகம் தொலைக்காட்சி பக்கம் கொண்டு வரலாம் என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே சீரியலின் மெகா சங்கமம் நடக்க இப்போது கயல் மற்றும் மருமகள் தொடர்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது.
விஜய் டிவி
இப்போது விஜய் டிவியும் சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர சில விஷயங்கள் செய்துள்ளனர். இதற்கு முன் இந்த தொலைக்காட்சியிலும் மெகா சங்கமம் எல்லாம் நடந்துள்ளது.
தற்போது இவர்கள் ரசிகர்களை அதிகம் பெற பழைய ஹிட் சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப முன்வந்துள்ளனர். அதாவது பாக்கியலட்சுமி மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப உள்ளார்களாம்.
வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும் 10 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu