பிக்பாஸ் செல்கிறாரா விஜய் டிவியின் ஹிட் சீரியல் நடிகர்... யாரு தெரியுமா?
பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.
தென்னிந்திய சின்னத்திரை பக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த இந்த ஷோவிற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்துள்ளனர். 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.
கமல்ஹாசன் ஸ்டைலில் இல்லாமல் அவருக்கு என்ன வருமோ அந்த பாணியில் நிகழ்ச்சியை நடத்தினார்.
சீரியல் நடிகர்
2025 வருடம் ஆரம்பித்து சில மாதங்கள் போனதும் சின்னத்திரை ரசிகர்கள் எப்போது பிக்பாஸ் ஆரம்பம் என கேட்க தொடங்கிவிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் குழு அதற்கான பதிலை அறிவித்தனர், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 9வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த 9வது சீசனில் கலந்துகொள்ள போகிறவர்கள் என நிறைய லிஸ்ட் வலம் வருகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் விஜய் டிவியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகிய பொன்னி சீரியல் நடிகர் சபரி பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.